ஓட்டுநர் உரிமங்கள் மார்ச் மாத இறுதிக்குள் வீடுகளுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை
கடந்த இரண்டு ஆண்டுகளாக அட்டைகள் இல்லாமையால் தேங்கிக் கிடந்த சுமார் 500,000 ஓட்டுநர் உரிமங்கள் மார்ச் மாத இறுதிக்குள் அச்சிடப்பட்டு அதன் உரிமையாளர்களின் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என மோட்டார் போக்குவரத்து ஆணையர் நாயகம் கமல் அமரசிங்க தெரிவித்துள்ளார்.
ஓட்டுநர் உரிமங்களை உடனடியாக வழங்குவதற்காக இதுவரை 800,000 அட்டைகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.
இதுவரை சுமார் 300,000 அட்டைகள் அச்சிடப்பட்டுள்ளதாகவும் ஆணையர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.
ஓட்டுநர் உரிமங்கள்
மோட்டார் போக்குவரத்துத் துறையின் கிளை வேரஹெரவில் திறக்கப்பட்டுள்ளது.

மேலும் அச்சிடப்பட்ட அனைத்து ஓட்டுநர் உரிமங்களையும் கூரியர் சேவையின் கீழ் உரியவர்களின் வீடுகளுக்கு அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
நிலுவையிலுள்ள ஓட்டுநர் உரிமங்களை அச்சிடுவதை விரைவுபடுத்த மோட்டார் வாகனத் திணைக்களத்தின் அதிகாரிகள் இரவும் பகலும் உழைத்து வருகின்றனர்.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் 25 அதிகாரிகள் மற்றும் முப்படைகளின் அதிகாரிகளிடமிருந்தும் உதவி பெறுவதாகவும் கமல் அமரசிங்க மேலும் தெரிவித்தார்.