5000 பாடசாலை மாணவர்களுக்கு சிறைத்தண்டனை:வெளியான அதிர்ச்சி தகவல்-செய்திகளின் தொகுப்பு
போதைப்பொருள் பயன்பாட்டு குற்றச்சாட்டின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சாதாரண தர மற்றும் உயர்தர வகுப்பு மாணவர்களின் எண்ணிக்கை 5000 வரை அதிகரித்துள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் மேலதிக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
நிகழ்ச்சியொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
2015ம் ஆண்டு பாடசாலை செல்லாத சுமார் 600 பேர் போதைப்பொருள் குற்றச்சாட்டு தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
அந்த தொகையானது, 2019ம் ஆண்டாகும் போது 190 வரை குறைவடைந்திருந்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனினும், சாதாரண தரம் மற்றும் உயர்தரம் கல்வி பயிலும் மாணவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.
2015ம் ஆண்டு 2000மாக காணப்பட்ட அந்த தொகையானது, 2021ம் ஆண்டாகும் போது, 5000 வரை அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களில் 16 முதல் 17 வயதுக்கு இடைப்பட்ட மாணவர்கள் அதிகளவில் காணப்படுவதாகவும் சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் கூறுகின்றார்.
2015ம் ஆண்டு போதைப்பொருள் குற்றச்சாட்டு தொடர்பில் அதிகளவாக 30 முதல் 40 வயதுக்கு இடைப்பட்டவர்களே இருந்ததாக கூறிய அவர், தற்போது 22 முதல் 30 வயதுக்கு இடைப்பட்டவர்களே அதிகளவில் இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.
2020ம் ஆண்டு போதைப்பொருள் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டவர்களில் 22 பட்டதாரிகளும் அடங்குவதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் மேலதிக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான செய்திகளின் தொகுப்பு,