குறைந்த வருமானம் கொண்ட அனைத்து குடும்பங்களுக்கும் 5000 ரூபாய்
சமூர்த்தி உதவிக்கு மேலதிகமாக குறைந்த வருமானம் கொண்ட அனைத்து குடும்பங்களுக்கும் 5000 ரூபாய் கொடுப்பனவு வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அதற்காக நேற்றைய தினம் கூடிய அமைச்சரவை கூட்டத்தில் இணக்கப்பாடு எட்டப்பட்டதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
நேற்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் அமைச்சரவை கூட்டம் இடம்பெற்றுள்ளது.
சுகாதாரத் துறையில் உள்ள பிரச்சினைகள் குறித்து அதிக கவனம் செலுத்தப்படுவதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
அரிசி விலையை கட்டுப்படுத்துவது தொடர்பிலும் அமைச்சரவையில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு ஊடகங்களிடம் பேசிய போக்குவரத்து அமைச்சர் காமினி லோகுகே, எரிபொருள் விலை அதிகரித்த போதிலும் பஸ் கட்டணத்தை அதிகரிக்க எந்த முடிவும் எடுக்கவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முடிந்த பிறகும் ஜோடியாக சுற்றிய தீபிகா-சரவணன் இடையில் இப்படியொரு பிரச்சனையா? Cineulagam