அடுத்த வருடம் இலங்கைக்கு கிடைக்கவுள்ள 500 மில்லியன் டொலர் வருமானம்! அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு
அடுத்த வருடம் மாணிக்கக்கல் ஏற்றுமதி மூலம் நாட்டுக்கு 500 மில்லியன் டொலர் வருமானத்தை பெற்றுத்தருவதாகவும், இல்லை என்றால் அமைச்சர் பதவியை இராஜினாமா செய்வதாகவும் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய போதே இதனை தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,

ஒரு பில்லியன் டொலர் மதிப்புள்ள கற்கள் (இரத்தினங்கள்) நாட்டை விட்டு வெளியே போயுள்ளன. ஆனால் எங்களுக்கு 170 மில்லியன் டொலர்கள் மட்டுமே கிடைத்துள்ளது. இருப்பினும் இந்த டொலர்கள் இலங்கைக்கு வருவதில்லை.இது குறித்து விவாதம் நடத்தி வருகின்றோம்.
இந்த நாட்டிற்கு 180 நாட்களுக்குள் டொலர் வர வேண்டும். எனது முயற்சியால் அடுத்த ஆண்டு நாட்டிற்கு 500 மில்லியன் டொலர்களைக் கண்டுபிடிப்பேன் என்று உறுதியாகச் சொல்கின்றேன். 500 மில்லியன் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் அமைச்சர் பதவியில் இருந்து விலகுவேன் என்றும் தெரிவித்துள்ளார்.
முத்துவிடம் சிக்கிய க்ரிஷ் கடத்தல்காரர்கள், அடுத்து அருண் செய்த காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
படப்பிடிப்பு தளத்தில் திடீர் சண்டை போட்டுக்கொண்ட மகாநதி சீரியல் நடிகர்கள்... வைரலாகும் வீடியோ Cineulagam
யாருக்கும் தெரியாமல் மயிலை பார்க்க சென்ற மீனா, அவரது அம்மா சொன்ன விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
எல்லாமே எல்லை மீறிப்போய்விட்டது... 2026ஆம் ஆண்டு குறித்த வங்கா பாபாவின் மற்றொரு எச்சரிக்கை News Lankasri