கோவிட் காரணமாக 500 கிராம உத்தியோகத்தர்கள் பாதிப்பு! 5 பேர் பலி
கோவிட் பெருந்தொற்று காரணமாக இதுவரையில் சுமார் 500க்கும் மேற்பட்ட கிராம உத்தியோகத்தர்கள் கோவிட் தொற்றுக்கு இலக்காகி உள்ளதுடன், ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.
இலங்கை ஐக்கிய கிராம உத்தியோகத்தர்கள் சங்கத்தின் பிரதம செயலாளர் எஸ்.ஏ. சீலமன்ஆராச்சி, இந்த விடயம் குறித்து சுதேச விவகார ராஜாங்க அமைச்சின் செயலாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
கிராம உத்தியோகத்தர் ஒருவர் தனிமைப்படுத்தலில் இருந்தால் இதுவரையில் வழங்கப்பட்டு வந்த 10000 ரூபா உலர் உணவுப் பொருட்கள் தற்பொழுது குறைந்த வருமானம் ஈட்டும் மக்களுக்கு மட்டுமே வழங்கப்படுகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனால் குடும்பத்துடன் தனிமைப்படுத்தலில் இருக்கும் கிராம உத்தியோகத்தர்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
கிராம உத்தியோகத்தர்களும் பெரும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் தங்களது கடமைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு கடமைகளில் ஈடுபட்டு வரும் கிராம உத்தியோகத்தர்களுக்கு அமைச்சு மட்டத்தில் நிவாரணங்களை வழங்க வேண்டுமென கடிதத்தில் கோரியுள்ளார்.





ஒரு நாள் கூத்து காட்டும் போட்டியாளர்.. இதுக்கு மேல தாங்கமாட்டாரு- திவாகரனை ஓரங்கட்டிய பிரபலம் Manithan

பிரித்தானியா நோக்கி பறந்த ஏர் இந்தியா விமானம்: கடைசி நேரத்தில் RAT இயக்கப்பட்டதால் பரபரப்பு News Lankasri
