பேரிடரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான ஐம்பதாயிரம் ரூபா கொடுப்பனவு தொடர்பில் வெளியான தகவல்
இலங்கையில் அண்மையில் பதிவான பேரனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அடுத்த கட்ட கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி பேரிடரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சமையலறை உபகரணங்களுக்காக வழங்க உத்தேசிக்கப்பட்ட 50000 ரூபா கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கொடுப்பனவை பெற்றுள்ள குடும்பங்கள்
அதற்கமைய, இதுவரை 3665 குடும்பங்களுக்கு இந்தக் கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் பேரிடர் நிவாரண சேவைகள் நிலையம் தெரிவித்துள்ளது.

அத்துடன், இந்தக் கொடுப்பனவுக்கு 147,628 குடும்பங்கள் தகுதி பெற்றுள்ளதாக அதன் மேலதிக செயலாளர் கே.ஜி. தர்மதிலக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை 25,000 மற்றும் 50,000 ரூபாய் கொடுப்பனவுகளை வழங்குவதற்கு காணி உரிமை அவசியம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |