நல்லூர் பெருவிழாவில் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த விசேட நடவடிக்கை(Video)

Jaffna Northern Provincial Council Nallur Kandaswamy Kovil
By Kajinthan Aug 11, 2023 01:02 PM GMT
Report

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசாமி ஆலய வருடாந்த உற்சவம் எதிர்வரும் 21 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாக உள்ளது.

இந்நிலையில் ஆலய வளாகத்தில் இடம்பெறும் திருட்டுக்கள், வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்துவதற்காக யாழ்ப்பாண மாநகர சபையினால் 50க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்பட்டு குற்றச் செயல்களை கட்டுப்படுத்துவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாநகர சபையின் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

மேலும், நல்லூர் கந்தன் ஆலய திருவிழா முன்னேற்பாடுகள் தொடர்பான கூட்டம் ஒன்று யாழ்ப்பாண மாநகர சபையில் இன்று(11.08.2023) காலை நடைபெற்றது.


பொதுமக்களுக்கான அறிவுறுத்தல்

இதன்போது புதிய கட்டுப்பாடுகள், நடைமுறைகள், தீர்மானங்கள் தொடர்பிலும் பொதுமக்களுக்கான அறிவுறுத்தல் தொடர்பிலும் மாநகர சபையின் ஆணையாளர் த.ஜெயசீலன் கருத்து வெளியிடிருந்தார்.

இதன் போது மேலும் கருத்து தெரிவித்த அவர், 

ஆகஸ்ட் 19 ஆம் திகதி காலையில் இருந்து நல்லூர் ஆலய சுற்றுவீதிகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு, செப்டம்பர் 16ஆம் திகதி வைரவர் சாந்தி நிறைவடைந்த பின்னர் நள்ளிரவே திறந்து விடப்படும்.

நல்லூர் பெருவிழாவில் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த விசேட நடவடிக்கை(Video) | 50 Surveillance Cameras To Control Crime In Nallur  

ஆலய வெளி வீதியைச் சூழ ஆலய நிர்வாகத்தினரால் சிவப்பு, வெள்ளை வர்ணக் கொடிகளால் எல்லையிடப்படும் வீதித்தடை பகுதிகளினுள் மாநகர சபையின் நீர் விநியோக வண்டி மற்றும் கழிவகற்றும் வண்டியை தவிர எக்காரணம் கொண்டும் வாகனங்கள் உட் செல்ல முடியாது.

நல்லூர் இரதோற்சவம்

நல்லூர் பெருவிழாவில் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த விசேட நடவடிக்கை(Video) | 50 Surveillance Cameras To Control Crime In Nallur

அதேபோல வெள்ளை வர்ணக் கொடிகளால் எல்லையிடப்படும் வீதித்தடை பகுதிகளினுள் எந்தவிதமான வியாபார நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியாது.

மேலும், ட்ரோன் கமராக்களை பயன்படுத்தி காணொளி பதிவுசெய்ய முடியாது. காலணிகளுடன் ஆலய வளாகத்திற்குள் பிரவேசிக்க முடியாது. ஆலயத்துக்கு நேர்த்திக்கடன்களைக் கழிப்பதற்காக வருகின்ற தூக்குகாவடிகள் அனைத்தும் ஆலயத்தின் முன்பக்க பருத்தித்துறை வீதி வழியாக மட்டுமே உள்நுழைய முடியும்.

அவ்வாறு வருகின்ற காவடிகள் இறக்கப்பட்டதும், வாகனங்கள் அனைத்தும், செட்டித்தெரு வீதி வழியாக வெளியேறுவதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.

வீதி மூடப்பட்டிருக்கும் தருணங்களில் பருத்தித்துறை வீதி வழியாக வரும் வாகனங்கள் யாழ் மாநகர சபைக்கு முன்பாக உள்ள வீதியால் பயணித்து யாழ் நகரை அடைய முடியும்.

எனினும் இரதோற்சவம் மற்றும் சப்பர திருவிழாக்களின் போது கச்சேரி நல்லூர் வீதியாலேயே பயணிக்க முடியும்.

பாதுகாப்பு ஏற்பாடுகள் பொலிஸார் மேற்கொள்ளவுள்ளதுடன் கண்காணிப்பு கமராக்கள் பொருத்தப்படவுள்ளது.” என தெரிவித்துள்ளார்.

மேலதிக தகவல் - தீபன்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US