கறுப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள 50 வைத்தியர்கள்!
முன்னறிவிப்பு இன்றி வெளிநாடு சென்ற 50 வைத்தியர்களை கறுப்பு பட்டியலில் சேர்த்துள்ளதாக சுகாதார அமைச்சின் பணிப்பாளர் வைத்தியர் பிரியந்த அத்தபத்து தெரிவித்துள்ளார்.
இதேவேளை மறு அறிவிப்பு வரும் வரை பலாங்கொடை வைத்தியசாலையில் அவசர அறுவை சிகிச்சைகள் மாத்திரமே மேற்கொள்ளப்படும் என வைத்தியசாலை நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அவசர அறுவை சிகிச்சைகள் மாத்திரமே

பலாங்கொடை வைத்தியசாலையில் ஆறு வைத்தியர்கள் கடமையாற்றியிருந்த போதிலும் நேற்று(04.05.2023) இரண்டு வைத்தியர்கள் மாத்திரமே கடமையாற்றியிருந்தமையினால் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வரும் நோயாளர்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில் சத்திரசிகிச்சை நிபுணர்கள் இன்மையால் சத்திரசிகிச்சைகள் மட்டுப்படுத்தப்பட்டதால் அங்கு பதற்றமான சூழல் காணப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து பலாங்கொடை வைத்தியசாலையில் அவசர அறுவை சிகிச்சைகள் மாத்திரமே மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வளைகுடாப் போரில் அமெரிக்க அரசியலமைப்பின் தாக்கம்..! 11 மணி நேரம் முன்
சொந்த ராசியில் சுக்கிரன் பெயர்ச்சி : இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் அதிர்ஷ்ட கதவு திறந்தாச்சி! Manithan
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பான கதைக்களத்திற்கு இடையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வந்த போட்டோ... Cineulagam