17 வருட போர் வெற்றிக் கொண்டாட்டங்களை முன்னிட்டு ஜனாதிபதி விசேட உத்தரவு
5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முப்படைச் சிப்பாய்களுக்கு பதவி உயர்வுகளை வழங்குவதற்கான உத்தரவில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கைச்சாத்திட்டுள்ளார்.
விடுதலைப் புலிகளுடனான ஆயுதப் போர் வெற்றியை முன்னிட்டு வருடாந்தம் அனுஷ்டிக்கப்படும் போர் வெற்றிக் கொண்டாட்டங்களின் 17வது வருட நிறைவுக் கொண்டாட்டம் இன்று(19.05.2026) ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்றுள்ளது.
5 ஆயிரம் சிப்பாய்களுக்கு பதவி உயர்வு
இந்த தினத்தை முன்னிட்டு இந்த வருடம் 5000 -க்கும் மேற்பட்ட சிப்பாய்கள் மற்றும் அதிகாரிகளுக்கு பதவி உயர்வுகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

போர் வெற்றிக் கொண்டாட்டங்களை முன்னிட்டு வருடாந்தம் முப்படைத் தளபதிகளின் சிபாரிசுகளுக்கு அமைய குறித்த பதவி உயர்வுகள் வழங்கப்படும் மரபு கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.
அதன் பிரகாரம் இந்த வருடம் இலங்கையின் முப்படைகளிலும் இருந்து தெரிவு செய்யப்பட்டுள்ள 5,189 சிப்பாய்கள் மற்றும் அதிகாரிகளுக்கு பதவி உயர்வுகளை வழங்கும் உத்தரவொன்றில் முப்படைகளின் பிரதம தலைவர் என்ற வகையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கையொப்பமிட்டுள்ளார்.
பிரித்தானியாவில் திருமணம்... குடும்பம் ஒன்று விமான நிலையம் செல்லும் வழியில் கோர சம்பவம் News Lankasri
ஓமான் குறுக்கிட்டால் மொத்தமாக அழிப்போம்... ஈரான் போர் தொடர்பில் ட்ரம்ப் பகிரங்க மிரட்டல் News Lankasri
4 நாட்களில் உலகளவில் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam