பொதுஜன பெரமுன ஆரம்பித்து 5 ஆண்டுகள் பூர்த்தி
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 5வது ஆண்டு விழா நாளைய தினம் கொழும்பு தாமரை தடாகம் தேசிய அரங்கத்தில் நடைபெறவுள்ளது.
ஆண்டு விழா ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும், பிரதமருமான மகிந்த ராஜபக்ச(Mahinda Rajapaksha) தலைமையில் நடைபெறவுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கடந்த 2016 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதுடன் 2018 ஆம் ஆண்டு உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தாமரை மொட்டுச் சின்னத்தில் போட்டியிட்டு அமோக வெற்றியை பெற்றது.
கட்சி ஆரம்பிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளில் இந்த வெற்றி கிடைத்தது.
இதனையடுத்து கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணியின் வேட்பாளராக போட்டியிட்ட கோட்டாபய ராஜபக்ச(Gotabhaya Rajapaksha) 69 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார்.
அடுத்து நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் இந்த கட்சியின் தலைமையிலான கூட்டணி அமோக வெற்றியை பெற்றதுடன் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை கைப்பற்றியது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தற்போதைய நிதியமைச்சர் பசில் ராஜபக்சவினால்(Basil Rajapaksha) ஸ்தாபிக்கப்பட்டதுடன் அதன் ஆரம்ப தலைவராக தற்போதைய வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் பதவி வகித்தார்.
ஜீ.எல்.பீரிஸ் பின்னர், கட்சியின் தலைவர் பதவியை மகிந்த ராஜபக்சவிடம் கையளித்தார்.
இங்கிலாந்து முழுவதும் பேருந்துகளில் சிறார்களுக்கு... தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய மாற்றம் News Lankasri