கொழும்பு அடுக்குமாடி குடியிருப்பில் 5 வயது குழந்தைக்கு ஏற்பட்ட விபரீதம்
கொழும்பில் உள்ள மாளிகாவத்தை அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 5 வயது குழந்தையொன்று வான் மோதி உயிரிழந்துள்ளது.
நான்கு பேர் கொண்ட குடும்பத்தின் மூன்றாவது குழந்தையான நிவேன் மின்னஸ் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தனது வீட்டின் முன் விளையாடிக்கொண்டிருந்த போது சாலையில் சென்று கொண்டிருந்த ஒரு வான் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டது.

வான் சாரதி பொலிஸாரால் கைது
இந்த விபத்தில் குழந்தைக்கு மேலோட்டமான காயங்கள் மட்டுமே ஏற்பட்டிருந்த நிலையில், இரத்த வாந்தி எடுத்ததால் கொழும்பில் உள்ள லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
இதன்பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை, சிறப்பு சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளது.

இதனையடுத்து 50 வயதுடைய வான் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் அவர் கைது செய்யப்பட்ட நேரத்தில் போதைப்பொருள் அல்லது மது அருந்தியிருக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 13 மணி நேரம் முன்
ஈரானில் இருந்து யுரேனியம் மீட்டு எடுக்கப்படும்: புதிய ஒப்பந்தம் குறித்து டிரம்ப் அதிரடி News Lankasri
முதல் நாளிலேயே தடுமாறிய ட்ரம்பின் ஹார்முஸ் முற்றுகை... அதிரடியாகக் கடந்த ஈரான் கப்பல்கள் News Lankasri
ஹார்முஸ் முற்றுகையைக் கைவிடுங்கள்... ஈரானின் அதிரடி நகர்வால் ட்ரம்பிடம் கெஞ்சும் சவுதி அரேபியா News Lankasri
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜோடியாக நடிக்க கதிர், சரண்யா துரடியின் சம்பளம், எவ்வளவு தெரியுமா Cineulagam