வெளிநாட்டு மாணவர்கள் கனடாவில் எவ்வாறு நிரந்தர வதிவுரிமை பெறலாம்..!
வெளிநாட்டு மாணவர்கள் எவ்வாறு கனடாவில் எவ்வாறு நிரந்தர வதிவுரிமை (Permanent Residency) பெற்றுக்கொள்ள முடியும் என்பது குறித்த அறிவுறுத்தல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
கனடிய குடிவரவு குடியகழ்வு திணைக்களத்தினால் இந்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
வெளிநாடுகளிலிருந்து கனடாவிற்கு வந்து உயர்கல்வியை பூர்த்தி செய்யும் மாணவர்கள் நிரந்தரமாக வதிவதற்கு பல்வேறு வழிகள் காணப்படுகின்றன.
முதலாவது பட்டப்படிப்பின் பின்னர் பணி அனுமதி என்னும் முறையின் கீழ் விண்ணப்பம் செய்ய முடியும்.
P2KZ5S
இரண்டாவது விரைவு நுழைவு முறைமையின் ஊடாக வெளிநாட்டு பட்டதாரிகள் நிரந்தர வதிவுரிமைக்காக விண்ணப்பிக்க முடியும். வயது, கல்வி,மொழியறிவு, தொழில் வரலாறு உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையில் இந்த விண்ணப்பதாரிகளுக்கு புள்ளிகள் வழங்கப்படும்.
மூன்றாவதாக கனடிய தொழில் அனுபவத்தின் அடிப்படையிலும் விண்ணப்பம் செய்ய முடியும்.
நான்காவது வழியாக பி.என்.பி முறைமையின் ஊடாகவும் நிரந்தர வதிவுரிமைக்காக விண்ணப்பம் செய்ய முடியும். கனடாவின் பெரிய மாகாணங்கள் இந்த திட்டத்தின் கீழ் நிரந்தர வதிவுரிமை வழங்குகின்றன.
பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்பு
2025 ஆண்டளவில் பி.என்.பி முறையின் கீழ் 110000 பேருக்கு நிரந்தர வதிவுரிமை வழங்கப்பட உள்ளது. அட்லாண்டிக் குடிவரவுத் திட்டத்தின் ஊடாகவும் நிரந்தர வதிவுரிமைக்காக விண்ணப்பம் செய்ய முடியும்.
இதேவேளை அட்லாண்டிக் மாகாணங்களில் தகுதி வாய்ந்த வெளிநாட்டு பணியாளர்கள் பணிக்கு அமர்த்தப்படுவர்.
மேலும் அண்மையில் பட்டப் படிப்பினை பூர்த்தி செய்து கொண்ட வெளிநாட்டு மாணவர்களுக்கும் இதில் சந்தர்ப்பம் வழங்கப்படுகின்றது.
கிராமிய மற்றும் வடக்கு குடிவரவு பரீட்சார்த்த திட்டத்தின் ஊடாகவும் இந்த நிரந்தர வதிவுரிமை பெற்றுக்கொள்ள முடியும்.
விவசாய மற்றும் உணவு பரீட்சார்த்த குடிவரவுத் திட்டத்தின் ஊடாகவும் நிரந்தர வதிவுரிமை பெற்றுக்கொள்ள முடியும்.
குறிப்பாக விலங்க வேளாண்மை, பசுமை விவசாயம், இறைச்சி பதப்படுத்தல் போன்ற தொழில்துறைகளிலும் சர்வதேச மாணவர்களுக்கு வாய்ப்பு உண்டு என தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |