காசா நகரில் இஸ்ரேல் நடத்திய வான்வழித்தாக்குதல்
காசா நகரின் அல்-ஜலா தெருவை நோக்கி இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் 5 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த தாக்குதலில் மேலும் 10 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதில் காயமடைந்த அனைவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதே நேரத்தில் காசா பகுதிக்கு தெற்கே உள்ள கிழக்கு கான் யூனிசில் வசிப்பவர்களை உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேல் ராணுவம் வலியுறுத்தியுள்ளது.
7KCHS
இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் அவிச்சாய் அட்ரே தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், கான் யூனிசின் கிழக்கே உள்ள பகுதிகளில் வசிப்பவர்கள் மற்றும் இடம்பெயர்ந்தவர்களை உடனடியாக மனிதாபிமான மண்டலத்திற்கு வெளியேற்றுமாறு வலியுறுத்தினார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
