பேருந்து உரிமையாளர்களுக்கு போக்குவரத்து ஆணைக்குழு விடுத்துள்ள எச்சரிக்கை
வீதி அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமான முறையில் பயணிகளை ஏற்றிச் செல்லும் பேருந்துகளுக்கான அபராதத்தை ஐந்து இலட்சம் ரூபாவாக அதிகரிக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
3,200 தொலைதூர சேவை பஸ்கள் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் ஒழுங்குமுறையின் கீழ் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் பயணிகள் பெரும்பாலும் வீதி அனுமதிப்பத்திரம் இல்லாத பேருந்துகளில் ஏற்றிச் செல்லப்படுகிறனர் என தெரிவிக்கப்படுகின்றன.
குறிப்பாக, வெள்ளவத்தை மற்றும் மருதானையை அண்மித்த பகுதிகளில் வீதி அனுமதிப்பத்திரம் இல்லாத பேருந்துகள் நிறுத்தப்பட்டு சட்டவிரோதமான முறையில் பயணிகளை ஏற்றிச் செல்லப்படுவதாக கூறப்படுகிறது.
போக்குவரத்து ஆணைக்குழு
பேருந்துகளை கண்டறிந்து வழக்குத் தொடர தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
இவ்வாறான பேருந்து சாரதிகள் மற்றும் உரிமையாளர்களுக்கு எதிராக ஐந்து இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்படும் எனத் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |