திருகோணமலையில் கடந்த 24 மணித்தியாலத்தில் கோவிட் தொற்றால் 5 பேர் மரணம்
திருகோணமலையில் கோவிட் தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன், 73 பேருக்கு கோவிட் தொற்று கண்டறியப்பட்டதையடுத்துடன், இதுவரை 76 பேர் உயிரிழந்துள்ளதாக திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் வீ.பிரேமானந் இன்று தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இரண்டு பேரும், மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 3 பேரும் உட்பட 5 பேர் கடந்த 24 மணித்தியாலத்தில் உயிரிழந்ததையடுத்து மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 76 ஆக அதிகரித்துள்ளது.
அதேவேளை, திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகளுக்குக் கீழ் உள்ள பிரதேச சுகாதார அதிகாரிகள் பிரிவுகளான கிண்ணியா, மூதூர், உப்புவெளி, திருகோணமலை, குச்சவெளி, குறிஞ்சாக்கேணி, மூதூர் ஆகிய வைத்திய சுகாதார அதிகாரி பிரிவுகளில் கடந்த 24 மணித்தியாலத்தில் 73 தொற்றாளர்கள் அன்டிஜன் மற்றும் பி.சி.ஆர் பரிசோதனை மூலம் கண்டறியப்பட்டதையடுத்து மாவட்டத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை இதுவரை 3207 ஆக அதிகரித்துள்ளது.
எனவே பொதுமக்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியில் வரவேண்டாம் .அதேவேளை
சுகாதார வழிமுறைகளைத் தொடர்ந்தும் பின்பற்றி அவதானமாகச் செயற்படுமாறு கோரிக்கை
விடுத்துள்ளார்.