பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல்: 5 சீனர்கள் பலி
பாகிஸ்தானில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் சீனாவை சேர்ந்த 5 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சீன நாட்டினர் சென்ற வாகனத்தின் மீது தசு எனும் பகுதியில் தற்கொலை படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
சீன நிறுவனங்கள்
பாகிஸ்தானின் பல பகுதிகளில் நடைபெறும் கட்டுமானப்பணிகளில் சீன நிறுவனங்கள் ஈடுபட்டுள்ள நிலையில் சீன பொறியாளர்கள் சென்ற வாகனத்தின் மீது ஆயுதக்குவியலுடன் வந்த தற்கொலைப்படை பயங்கரவாதி வெடிக்கச் செய்துள்ளார்.

இந்த நிலையில், இந்த தாக்குதலில் சீனாவைச் சேர்ந்த 5 பேர் பாகிஸ்தானை சேர்ந்த கார் சாரதி உட்பட மொத்தம் 6 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், அணை கட்டுமானத்திற்காக வாகனத்தில் சென்ற சீனப் பொறியாளர்களைக் குறிவைத்தே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
சூரிய பெயர்ச்சியால் உருவாகும் அரிய இரட்டை ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் உறுதி! Manithan
பிரித்தானிய பள்ளியில் நடந்த கத்திக்குத்து தாக்குதல்: 14 வயது சிறுமி மீது மூன்று கொலை வழக்குப்பதிவு News Lankasri
பிரித்தானியாவை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ள இலங்கையர்: கர்ப்பிணி மனைவியின் அச்சம் News Lankasri