சட்ட மா அதிபரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்ட 5 வேட்பாளர்களின் அறிக்கைகள்
2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான வருமானம் மற்றும் செலவு அறிக்கைகளை சமர்ப்பிக்கத் தவறிய ஐந்து வேட்பாளர்கள் மீது வழக்குத் தொடரப்பட்ட அறிக்கைகள் சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன.
சாத்தியமான சட்ட நடவடிக்கை குறித்து சட்டமா அதிபரின் வழிகாட்டுதலைப் பெறுவதற்காக இந்த அறிக்கைகள் அனுப்பப்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஐந்து வேட்பாளர்கள்
2023 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க தேர்தல் செலவு ஒழுங்குமுறைச் சட்டத்தின் கீழ், அனைத்து வேட்பாளர்களும் விரிவான வருமானம் மற்றும் செலவு அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும்.

தேவையான அறிக்கைகளை சமர்ப்பிக்கத் தவறிய மேலும் 13 நபர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருகக்கு ஆணைக்குழு மேலும் அறிவுறுத்தியது.
இந்த விவகாரம் நீதிமன்றத்துக்கு பரிந்துரைக்கப்பட்ட நிலையில், தொடர்புடைய வேட்பாளர்களின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தாயகத்தில் நினைவேந்தல் நிகழ்வுகளை குழப்புவதில் கஜேந்திரகுமார் அணி மும்முரம் - மணிவண்ணன் குற்றச்சாட்டு
கொடூர வில்லனாக என்ட்ரி கொடுக்கும் ராவணன் ஆதிமுத்து, யாரு பாருங்க... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
அப்பா, மனைவிக்கு கோடிக்கணக்கில் கடன்: தவெக தலைவர் விஜய்யின் முழு சொத்து மதிப்பு விவரம் News Lankasri