கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிரடி கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்ட நபர்கள்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்கள் ஐந்து பேர் நாடு கடத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர்களான பங்களாதேஷ் பிரஜைகளே இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டதாக கட்டுநாயக்க விமான நிலையத்தின் குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
போலி விசாக்களைப் பயன்படுத்தி மாசிடோனியாவுக்கு தப்பிச் செல்லும் நோக்கில் சந்தேக நபர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகைத்தந்துள்ளனர்.
இண்டிகோ விமானம்
அவர்கள் இந்தியாவின் சென்னையில் இருந்து இண்டிகோ விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தலைமை குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரி அவர்கள் மீது சந்தேகம் கொண்டு விசாரித்ததை தொடர்ந்து, சந்தேக நபர்களிடம் இருந்த மாசிடோனிய விசாக்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
நாடு கடத்தல்
விசாக்கள் மேலதிக விசாரணைக்காக எல்லை கண்காணிப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர், விசாக்கள் போலியானவை என்பது தெரியவந்தது.

சந்தேகத்திற்குரிய வெளிநாட்டினரை மேலும் விசாரித்ததில், அவர்கள் நாட்டிற்கு வந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு மாசிடோனியாவுக்கு தப்பிச் செல்ல திட்டமிட்டிருந்ததாக தெரியவந்தது.
நாட்டிற்கு வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் அதிகாரிகளிடம் சந்தேக நபர்கள், நாடு கடத்தலுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan
ரஷ்ய பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு இணையத்தில் கிடைத்த தோழி: பின்னர் காத்திருந்த அதிர்ச்சி News Lankasri
Bigg Boss: கொடுத்த வேலையை பார்க்க வக்கில்ல.... நான் உங்ககிட்ட பேசலை! திவ்யாவை கிளித்தெடுத்த விஜய்சேதுபதி Manithan