இரத்தினபுரி தமிழ் மகா வித்தியாலயத்திற்கு 5 ஏக்கர் புதிய காணி! - செந்தில் தொண்டமான் அவர்கள் நடவடிக்கை
இரத்தினபுரி மாவட்ட தமிழ் மக்களின் நீண்டகால தேவையாகக் காணப்பட்ட சகல வசதிகளுடன் கூடிய தமிழ் பாடசாலை ஒன்றினை அமைப்பதற்குத் தேவையான காணியினை பெற, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப செயலாளர் ரூபன் பெருமாள் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க பிரதமரின் இணைச் செயலாளரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவருமாகிய செந்தில் தொண்டமானின் முயற்சியில் இன்று அனுமதி கிடைக்கப்பட்டுள்ளது.
பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரனவிடமும், பலாங்கொடை பெருந்தோட்ட நிறுவனத்துடனும் வேண்டுகோள் விடுத்ததற்கமைய 5 ஏக்கர் அளவிலான காணியினை பெற்றுக்கொடுக்க பலாங்கொடை பெருந்தோட்ட கம்பெனி இணக்கப்பாட்டினை வழங்கியுள்ளது.
கடந்த சில நாட்களாக இரத்தினபுரி பிரதேசத்திற்கு பாரிய மழை வீழ்ச்சி பதிவான நிலையில், இரத்தினபுரி தமிழ் மகா வித்தியாலத்தில் காணப்பட்ட தடுப்புச்சுவர் இடிந்து விழுந்ததால் கல்லூரியின் பிரதான மண்டபம் சேதத்திற்குள்ளானது.
அதனைத் தொடர்ந்த குறித்து பாடசாலையின் அதிபர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப செயலாளர் ரூபன் பெருமாள் அவர்களுக்கு அறிவித்ததற்கமைய அவர், பிரதமரின் இணைப்புச் செயலாளரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவருமாகிய செந்தில் தொண்டமான் மற்றும் தோட்ட வீடமைப்பு உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஆகியோரின் கவனத்திற்கும் கொண்டு சென்றுள்ளார்.
அதனை தொடர்ந்து பல தரப்பட்ட முயற்சிகளின் பலனாக இரத்தினபுரி புதிய நகரத்தினை அண்மித்த பாம்கார்டன் தோட்டத்தின் வெரழுப்ப பிரதேசத்தில் அமைந்துள்ள ஐந்து ஏக்கர் காணியினை பலாங்கொடை பெருந்தோட்ட நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி வெக்குனகொடவினால் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப செயலாளர் ரூபன் பெருமாளிடம் குறித்த காணியினை வழங்குவதற்கான ஆவணம் கையளிக்கப்பட்டுள்ளது.








ஜீ தமிழின் கெட்டி மேளம் சீரியல் ரசிகர்களுக்கு வந்த ஷாக்கிங் தகவல்... என்ன இப்படி ஒரு முடிவு எடுத்துட்டாங்க Cineulagam

ஜெயிலர் 2 இன்னும் ரிலீஸ் ஆகல.. அதுக்குள்ள ரஜினிகாந்த் எடுத்த அதிரடி முடிவு! என்ன தெரியுமா Cineulagam

டிரம்புக்கு வயது 79 இல்லை…வெறும் 65 வயது தான்! மருத்துவ அறிக்கை வெளியிட்ட வெள்ளை மாளிகை News Lankasri
