இலங்கையில் ஒரே நாளில் அதிரடியாக கைது செய்யப்பட்ட 5,364 பேர்
நாடளாவிய ரீதியில் நேற்று செவ்வாய்க்கிழமை (07) மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது 5,364 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் ஊடகப்பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
பொலிஸ் அதிகாரிகள், இராணுவ வீரர்கள், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் கடற்படையினர் ஆகியோர் இணைந்து இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை
இதேவேளை, இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்பில் 35 பேரும், சந்தேகத்தின் பேரில் 716 பேரும், பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 284 பேரும், திறந்த பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 170 பேரும்,மதுபோதையில் வாகனங்களை செலுத்தியமை தொடர்பில் 21 சாரதிகளும், கவனக்குறைவாக வாகனங்களை செலுத்தியமை தொடர்பில் 15 சாரதிகளும், ஏனைய போக்குவரத்து விதிமுறைகளை மீறியமை தொடர்பில் 3835 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 7 மணி நேரம் முன்
கங்கையில் 12 மணி நேரம் மிதந்த சிறுவன்! உயிர் பிரிவதை வேடிக்கை பார்த்த பெற்றோர்... நடந்தது என்ன? Manithan
6 மாதம் தள்ளிப்போன விவாகரத்து வழக்கு.. நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
ஈரானில் இருந்து யுரேனியம் மீட்டு எடுக்கப்படும்: புதிய ஒப்பந்தம் குறித்து டிரம்ப் அதிரடி News Lankasri