நான்காவது நாளாகவும் கடற்படையினருக்கு காணி சுவீகரிப்பு முயற்சி : பொதுமக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது!
வடமராட்சி கிழக்கு,மருதங்கேணி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிரதேசத்தில் செம்பியன்பற்று வடக்கு பகுதியில் தனியாருக்கு சொந்தமான காணிகளை இலங்கை கடற்படையினருக்கு நிரந்தரமாகவே சுவீகரிக்கும் நோக்குடன் தொடர்ந்தும் 4ஆவது நாளாகவும் இன்று (27.07.2023) காணி அளவீட்டு முயற்சி இடம்பெற்றுள்ளது.
வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று வடக்கு பகுதியைச் சேர்ந்த தனியாருக்குச் சொந்தமான 15 பேர்ச் (ஒன்றரை பரப்பு) காணியை இலங்கை கடற்படையினருக்கு நிரந்தரமாக சுவீகரிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட இருந்த காணி அளவீட்டு பணி மக்கள் எதிர்ப்பால் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் விஜயம்
[0I5CM
இதன்போது பிரதேச மக்களுடன் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





முதல் மனைவி உடன் ஜோடியாக வந்த மாதம்பட்டி ரங்கராஜ்.. போட்டோ வைரல்! அப்போ இரண்டாம் மனைவி நிலை.. Cineulagam
