யானைகளால் நாசமாக்கப்பட்ட பெருமதியான வாழை மரங்கள்: மக்கள் விசனம்(Photos)
முல்லைத்தீவு - விசுவமடு, தொட்டியடி மேற்கு பகுதியிலுள்ள வாழை தோட்டத்திற்குள் புகுந்த யானைகளால் விலை மதிப்பான கப்பல் வாழை மரங்கள் நாசம் செய்துள்ளதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று(13) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தலைவர் பிரபாகரனை கடல்வழியாக காப்பாற்ற நடந்த கடைசி முயற்சி: மெய்ப்பாதுகாவலர் கூறும் முக்கியமான தகவல் (Video)
4 இலட்சம் ரூபாய் நட்டம்
தோட்டத்துக்குள் நேற்றிரவு 07மணியளவில் புகுந்த நான்கு யானைகள் அதிகாலை 2.00மணி வரை வாழை மரங்களை சேதப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
அரை ஏக்கர் வாழை திட்டத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்ட 480 பெருமதி மிக்க வாழைகுட்டிகள் வழங்கப்பட்டு அதில் 225 வாழைகளை பயன் பெரும் நேரத்தில் காட்டு யானைகள் சேதப்படுத்தியுள்ளதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவத்தில் 4 இலட்சம் ரூபாய் தமக்கு நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் கடந்த வருடமும் இதே போன்ற அழிவை சந்தித்துள்ளதாகவும் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
மேலும் தமது வாழ்வாதாரத்தை மேற்கொள்ள யானை வேலி ஒன்றை அமைத்து தருமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 5 மணி நேரம் முன்

சீனாவால் இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியில் கடும் தாக்கம் - Bajaj, Ather, TVS பாதிப்பு News Lankasri

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam
