தமிழ் பத்திரிகை ஆசிரியரிடம் 4 மணி நேரம் பயங்கரவாதத் தடுப்பு பிரிவு விசாரணை
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தொடர்பான செய்தியை வெளியிட்டமைக்காக இலங்கையின் தமிழ் பத்திரிகை ஆசிரியர் த.பிரபாகரன் மாவீரர் தினமான நேற்று பயங்கரவாதத் தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினரால் 4 மணி நேரம் கடுமையான விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இந்நிலையில், 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26ஆம் திகதி வெளியான குறித்தபத்திரிகையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தொடர்பாக வெளியான செய்தி தொடர்பாகவே பயங்கரவாதத் தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினர் பத்திரிகை ஆசிரியரிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தமிழ் மக்களால் மாவீரர் தினம் கடைப்பிடிக்கப்பட்டுவரும் நிலையில், குறித்த பத்திரிகை ஆசிரியர் கொழும்புக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார்.
புலம்பெயர் தேசங்களில் விடுதலைப்புலிகளின் தலைவரின் பெயரில் பெரும் சதி! சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு ஆதங்கம் (Photos)
பயங்கரவாதத் தடுப்பு விசாரணை
கொழும்பில் உள்ள பயங்கரவாதத் தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவுக்கு இன்று காலை 9 மணிக்கு அழைக்கப்பட்ட அவர் பிற்பகல் ஒரு மணிவரையில் பயங்கரவாதத் தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டதுடன், வாக்குமூலமும் பதிவு செய்ததாக கூறப்படுகிறது.
2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26ஆம் திகதி வெளியான இந்த பத்திரிகையில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரனின் பிறந்தநாள் தொடர்பான செய்தி, அவரது ஒளிப்படத்துடனும், மறுநாள் நடைபெறவிருந்த மாவீரர் நாள் அஞ்சலிக்கு அழைப்பு விடுக்கும் செய்தி ஒன்றும் வெளியாகியிருந்தன.
இவை தொடர்பாகவே பயங்கரவாதத் தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இது தொடர்பாக ஏற்கனவே யாழ்ப்பாணம் பொலிஸாரால் யாழ்ப்பாணம் நீதிமன்றில் வழக்கொன்றும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.