சிறைகளிலிருந்து தப்பியோடிய கைதிகள் தொடர்பில் வெளியான தகவல்
இந்த வருடத்தில் இதுவரை 49 கைதிகள் சிறைச்சாலைகளில் இருந்து தப்பியோடியுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளரும் ஊடகப் பேச்சாளருமான காமினி பி.திஸாநாயக்க ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
தப்பியோடியவர்களில் இருவர் மாத்திரமே இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தப்பியோடியவர்களைக் கைது செய்யும் நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கைதி தப்பியோட்டம்
வீரவில திறந்தவெளி சிறைச்சாலை முகாமிலிருந்து நேற்றுமுன்தினம் இரவு கைதி ஒருவர் தப்பியோடியுள்ளார். எப்பாவெல பகுதியை சேர்ந்த 34 வயதான கைதியே தப்பிச் சென்றுள்ளார்.
பாலியல் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டில் அந்தக் கைதிக்கு அநுராதபுரம் நீதிமன்றத்தால் தண்டனை வழங்கப்பட்டிருந்தது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





திருமண மண்டபத்தில் ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம் வெளிவந்தது.. ஷாக்கில் குடும்பம், சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam

10 திருமணம், 350 துணைவியர்..! மனைவிகளுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை: யார் இந்த இந்திய மன்னர்? News Lankasri

இந்தியக் கடற்படைக்கு ரூ.1 இலட்சம் கோடி மதிப்பில் 9 அதிநவீன நீர்மூழ்கி கப்பல்கள்., CCS ஒப்புதல் விரைவில் News Lankasri
