யாழில் திங்களன்று உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலையின் 48ஆவது நினைவேந்தல்
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற 4ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் கொல்லப்பட்டவர்களின் 48 ஆவது நினைவு தினம் நாளை மறுதினம் திங்கட்கிழமை காலை 9.30 மணியளவில் அனுஷ்டிக்கப்படவுள்ளது.
அந்த மாநாட்டில் கொல்லப்பட்டவர்களில் நினைவாக யாழ்ப்பாணம், முற்றவெளியில் அமைக்கப்பட்டுள்ள நினைவாலயத்தில் நினைவஞ்சலி நடத்தப்படுவது வழமை.
இதன்போது அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் ஆகியோரைக் கலந்துகொண்டு அஞ்சலியைச் செலுத்துமாறு ஏற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
1974ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3 ஆம் திகதி தொடக்கம் 10 ஆம் திகதி வரை யாழ்.
வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின்
இறுதிநாள் விருந்துபசார வைபவத்தின்போது வன்முறைக் கும்பலொன்றால் நடத்தப்பட்ட
தாக்குதலில் மாநாட்டில் கலந்துகொண்டிருந்த 11 பேர் கொல்லப்பட்டிருந்தனர்
என்பது குறிப்பிடத்தக்கது.
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 5 மணி நேரம் முன்
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan
முதலாளிகளாகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? Manithan
2025ம் ஆண்டு பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை: புள்ளிவிவரம் News Lankasri
கடை திறப்பு விழா முடிந்தது, அடுத்து தர்ஷன் கிளப்பிய பிரச்சனை, குணசேகரன் அடுத்த பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
விரைவில் முடிவுக்கு வரும் பூங்காற்று திரும்புமா சீரியலின் கிளைமேக்ஸ் காட்சியின் போட்டோஸ்... Cineulagam
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan