இலங்கையில் அதிகரிக்கும் கொலைகள்: வெளியான அறிக்கை
கடந்த ஆண்டின் முதல் பத்து மாதங்களில் 488 கொலைகள் பதிவாகியுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் 52 கொலைகள் துப்பாக்கிச் சூட்டில் நடந்துள்ளன. தங்காலை, நுகேகொட, கம்பஹா,இரத்னபுர மற்றும் எல்பிட்டிய ஆகிய ஐந்து பொலிஸ் பிரிவுகளில் முறையே 32, 27, 24, 24, 20 இந்த கொலைகள் பதிவாகியுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், 2018-2022 க்கு இடைப்பட்ட காலப்பகுதியில் 7017 காயங்கள் மற்றும் கொலைகள் பதிவாகியுள்ளதாகவும், இவற்றில் 2030 குற்றங்கள் கடந்த ஆண்டு பதிவாகியுள்ளதாகவும் அறிக்கை கூறுகின்றது.
வன்முறை குற்றச்செயல்கள்
நாட்டில் வன்முறைக் குற்றச் செயல்கள் அதிகரிப்பதைத் தடுக்க போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் கூற்றுப்படி, 2018 ஐ விட கடந்த ஆண்டு இந்த குற்றங்கள் ஐம்பது சதவீதம் அதிகரித்துள்ளது.
பெண்களுக்கு எதிரான வன்முறை
இதற்கிடையில், 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் பெண்களுக்கு எதிரான வன்முறைக் குற்றங்களின் எண்ணிக்கை 27 சதவீதம் அதிகரித்துள்ளது.
இலங்கை பொலிஸாரின் 2023 ஆம் ஆண்டு வருடாந்த தேசிய கணக்காய்வு அறிக்கையில் இந்த தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri

125,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த கற்கால மனிதர்கள் இயக்கிய தொழிற்சாலை ஜேர்மனியில் கண்டுபிடிப்பு News Lankasri

சீனாவால் இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியில் கடும் தாக்கம் - Bajaj, Ather, TVS பாதிப்பு News Lankasri
