புத்தளத்தில் கடற்படையிடம் சிக்கிய 477 கிலோகிராம் பீடி இலைகள் (Photos)
புத்தளம், கற்பிட்டி - இப்பந்தீவு கடல் பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து 477 கிலோகிராம் பீடி இலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கடல் பிரதேசத்தில் வடமேற்கு கடற்படை கட்டளைக்குச் சொந்தமான விஜய கடற்படையினர் நேற்று விசேட கண்காணிப்பு ரோந்து நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இதன்போது கடல் பிரதேசத்தில் சந்தேகத்துக்கிடமான முறையில் உரைப் பைகள் மிதந்து கொண்டிருப்பதை அவதானித்த கடற்படையினர், அந்த உரைப் பைகளைச் சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.
சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட பீடி இலைகள்
இதன்போது சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பீடி இலைகள் அடங்கிய 14 மூடைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

அரச ஊழியர்களின் ஓய்வூதியத்தில் சிக்கல்: தப்பிச் சென்ற ஜனாதிபதிக்கு 3 கோடி ரூபா - சபையில் வெளியான தகவல்
இலங்கையின் பல இடங்களுக்கு விநியோகிக்கும் நோக்கில் இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட அந்த பீடி இலைகள் அடங்கிய மூடைகளை சந்தேகநபர்கள், கரையோரப் பகுதிக்கு கொண்டு செல்ல முடியாத நிலையில் அதனைக் கடலில் கைவிட்டுச் சென்றிருக்கலாம் எனத் தாம் சந்தேகிப்பதாகக் கடற்படையினர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக தமது பொறுப்பில் வைக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஈழத் தமிழர் விடுதலைக்கு வழி என்ன..! யார் முன்வருவர்.. 26 நிமிடங்கள் முன்

நாராயண மூர்த்தியின் இன்ஃபோசிஸ் நிறுவனம் 2025 ஆம் ஆண்டில் Freshersக்கு வழங்கும் சம்பளம் எவ்வளவு? News Lankasri

ரோஹினி, க்ரிஷை பற்றி முத்துவிடம் கூறிய மீனா, அடுத்து என்ன நடக்கப்போகிறது.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
