கொக்கட்டிச்சோலையில் காணாமல்போன பெண் ஒருவர் தொடர்பில் பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை(Photo)
கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள படயாண்டவெளியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயார் கடந்த 22 ம் திகதி முதல் காணாமல் போயுள்ளார்.
எனவே இவர் தொடர்பான தகவல்கள் தெரிந்தால் உடனடியாக பொலிஸாருக்கு அறிவிக்குமாறு பொதுமக்களிடம் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த 47 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயாரான சடாச்சரம் தேவலஷ்மியின் கணவர் வெளிநாட்டில் வேலைபார்த்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸாரின் கோரிக்கை

இந்நிலையில ஒரு பிள்ளையான மகனாருடன் வாழ்ந்துவந்த சடாச்சரம் தேவலஷ்மி, கடந்து 22 ம் திகதி வீட்டில் இருந்து வெளியேறிய நிலையில் இதுவரை வீடு திரும்பாது காணாமல் போயுள்ளார்.
அவரை எங்கு தேடியம் கிடைக்காத நிலையில் அவரது மகன் நேற்று முன்தினம்(27.12.2022) பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதனடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருவதுடன் காணாமல் போயுள்ளவர் பற்றிய தகவல் தெரிந்தால் உடனடியாக 065-2056-936 என்ற கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலைய தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உலக அளவிலும் தமிழ்நாட்டிலும் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
தண்ணீர் மற்றும் டின் உணவுகளைச் சேமித்து வைக்குமாறு மக்களுக்கு பிரித்தானியா அறிவுறுத்தல் News Lankasri