சட்டவிரோதமாகப் பிரான்ஸ் செல்ல முற்பட்ட 47 பேர் வசமாகச் சிக்கினர்
சட்டவிரோதமாகப் படகு மூலம் பிரான்ஸுக்குச் செல்ல முற்பட்ட 47 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
வென்னப்புவ பிரதேசத்தில் கடற்படை மற்றும் வென்னப்புவ பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின்போதே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கடற்படையினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கு கடற்படை கட்டளை மற்றும் வென்னப்புவ பொலிஸாரால் நேற்றிரவு கூட்டுத் தேடுதல் நடவடிக்கை ஆரம்பமானது.
47 பேரும் கைது
இந்நிலையில், வென்னப்புவ நகரில் இன்று அதிகாலை சந்தேகத்துக்கிடமான 3 வான்களைச் சோதனையிட்டதன் பின்னர் கடல் வழியாக பிரான்ஸுக்குச் சட்டவிரோதமாக குடியேற முயற்சித்தனர் எனச் சந்தேகிக்கப்படும் 47 பேர் கைதுசெய்யப்பட்டனர்.
அவர்களில் 18 வயதுக்கு மேற்பட்ட 37 ஆண்கள் மற்றும் 6 பெண்கள் மற்றும் 18 வயதுக்குட்பட்ட 4 சிறுவர்கள் அடங்குகின்றனர். இந்தச் சட்டவிரோத செயலுக்குப் பயன்படுத்தப்பட்ட 3 வான்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைதுசெய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாணம், வவுனியா, திருகோணமலை, கல்முனை, மட்டக்களப்பு, புத்தளம், சிலாபம், மாரவில, மஹாவெவ, முந்தலம மற்றும் வெள்ளவத்தை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்கள் மேலதிக
விசாரணைகளுக்காக வென்னப்புவ பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்.. நாயகி இவரா, படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam

புது பாய்பிரென்ட் உடன் சமந்தா வெளியிட்ட ஸ்டில்கள்.. காதல் கிசுகிசுவுக்கு நடுவில் வைரலாகும் புகைப்படங்கள் Cineulagam
