இலங்கையில் மேலும் 46 பேர் கோவிட் தொற்றுக்கு பலி!
இலங்கையில் மேலும் 46 கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, இலங்கையில் கோவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1178 ஆக உயர்ந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த உயிரிழப்புக்கள் மே மாதம் 16ம் திகதி முதல் 22ம் திகதி வரை பதிவாகியவை என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இன்று அடையாளம் காணப்பட்ட கோவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 2906ஆக அதிகரித்துள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அத்துடன் நாட்டில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 161,242 ஆக உயர்வடைந்துள்ளது. இலங்கையில் கோவிட் தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 1,635 பேர் இன்று பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதற்கமைய நாட்டில் இதுவரை கோவிட் தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 126,995 ஆக அதிகரித்துள்ளது.