ஒரு வாரத்தில் 430 எரிவாயு வெடிப்புக்கள்: விசேட விசாரணை அறிக்கை வெளியிட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழு
இலங்கையில் கடந்த 29ம் திகதி முதல் நேற்று முன்தினம்(05) வரையான ஒரு வார காலப்பகுதியில் மாத்திரம் 430 வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
எரிவாயு சிலிண்டர் தீப்பற்றுகின்றமை மற்றும் அதனுடன் தொடர்புடைய வெடிப்பு குறித்து விசாரணை நடத்தித் தீர்வை பெற்றுக்கொடுக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இந்த விடயம் தெரியவந்துள்ளது.
இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் 5ம் திகதி வரை நாடு முழுவதும் 458 எரிவாயு வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
அதில் ஒரு வார காளத்தில் மாத்திரம் 430 வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
எரிவாயு அனர்த்த சம்பவ விபரம்
எரிவாயு சிலிண்டருக்கு சேதம் ஏற்பட்ட சம்பவம் :− 01
எரிவாயு குழாய்க்கு சேதம் ஏற்பட்ட சம்பவங்கள் :− 23
ரேகியூலேட்டருக்கு சேதம் ஏற்பட்ட சம்பவங்கள் :− 09
எரிவாயு அடுப்புகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் :− 178
வேறு உபகரணங்களுக்கான சேதங்கள் :− 03
எரிவாயு கசிவு : 244
இனிவரும் காலத்தில் எரிவாயு நிறுவனங்களினால் உரிய அளவிலான இரசாயனம் உள்ளடக்கப்படும் எனவும், எதிர்வரும் காலத்தில் எரிவாயு கசிவு ஏற்படும் பட்சத்தில், அது குறித்து பொது மக்கள் இலகுவாக அறிந்துகொள்ள முடியும் எனவும் அந்த குழு மேலும் தெரிவித்துள்ளது.
மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |



விமானங்களில் இருந்து தப்பித்து எதிரிப் பகுதிக்குள் விழும் விமானிகள் ஏன் தாக்கப்படுவதில்லை? News Lankasri
