நாட்டில் அதிகரிக்கும் யானைகளின் உயிரிழப்பு!
மனித – யானை மோதலால் சுமார் 43 யானைகள் உயிரிழந்துள்ளதாக சுற்றாடல் அமைச்சர் கலாநிதி தம்மிக்க படபாண்டி தெரிவித்துள்ளார்.
2025 ஜனவரி மாதம் மாத்திரம் மனித – யானை மோதலால் சுமார் 43 யானைகள் இறந்துள்ளதுடன் இந்த மோதகளால் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சுற்றாடல் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மனித-யானை மோதல்
இதேவேளை கடந்த பத்து ஆண்டுகளில் சுமார் 3,527 யானைகள் உயிரிழந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், மனித-யானை மோதல்களினால் சுமார் 1,195 பேர் உயிரிழந்துள்ளதாக பதிவாகியுள்ளது.
இந்நிலையில் தொடருந்தில் யானைகள் மோதி விபத்துக்கள் ஏற்படும் நிலைமையை தடுக்க உரிய அதிகாரிகளால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான விபத்துக்களால் தண்டவாளங்கள் தடம்புரண்டு, தொடருந்து பாதைகளில் சேதங்கள் ஏற்பட்டு தொடருந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Neeya Naana: மாமியார் வீட்டில் பிரியாணியில பீஸே வைக்கலை! குமுறிய மருமகன்... கோபிநாத் ரியாக்ஷன் Manithan
