மருந்துப்பொருள் இறக்குமதியில் 428 கடன் நிலுவை வைத்த கோட்டாபய அரசாங்கம்
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் ஆட்சிக்காலத்தில் மருந்துப்பொருள் இறக்குமதியில் 428 கோடி ரூபா நிலுவைத் தொகை வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மருந்துப்பொருள் இறக்குமதி
கடந்த மே மாதம் வரை அரசாங்க மருத்துவமனைகளுக்கான மருந்துப்பொருள் இறக்குமதி விடயத்தில் இந்த நிலுவைத் தொகை செலுத்தப்படாமல் உள்ளது.
பிரதான மருந்துப்பொருள் இறக்குமதியாளர்களுக்கு 311 கோடி ரூபாவும், மக்கள் வங்கிக்கு 92 கோடி ரூபாவும், இலங்கை வங்கிக்கு 25 கோடி ரூபாவும் இவ்வாறு நிலுவைத் தொகையாக செலுத்தப்பட வேண்டியுள்ளதாக கூறப்படுகிறது.

மருந்துப் பற்றாக்குறை
இவ்வாறான நிலுவைத்தொகை காரணமாக வெளிநாடுகளில் இருந்து மருந்துப்பொருட்களை இறக்குமதி செய்வதில் கடன் உத்தரவாதப் பத்திரங்களைப் பெற்றுக் கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாகவே கடந்த காலங்களில் இலங்கையில் தீவிர மருந்துப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வாளர் நாயகம் திணைக்களத்தின் ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.
பாகிஸ்தானில் இருந்து பாதியில் நாடு திரும்பும் 8 இலங்கை கிரிக்கெட் வீரர்கள்: ஒருநாள் தொடர் ரத்து? News Lankasri
டிசம்பர் 6 இந்தியாவின் 4 நகரங்களில் குண்டு வெடிப்புக்கு திட்டம் - விசாரணையில் அதிர்ச்சி தகவல் News Lankasri
ரஜினி, கமல் படத்திலிருந்து சுந்தர் சி திடீர் விலகல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. என்ன ஆச்சு Cineulagam