தேசிய கலைக்கூடத்தில் இருந்து காணாமல் போயுள்ள 42 பழங்கால ஓவியங்கள்
தேசிய கலைக்கூடத்தில் இருந்து மொத்தம் 42 பழங்கால ஓவியங்கள் காணாமல் போயுள்ளதாக புத்தசாசன, சமய மற்றும் பண்பாட்டு விவகாரங்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் வாய்மொழி கேள்விகளுக்கு பதிலளிக்கும்போது அமைச்சர் இன்று (21.05.2026) இந்த விடயத்தை வெளிப்படுத்தியு்ளளார்.
கையிருப்புப் பதிவேடு
2015ஆம் ஆண்டில் தேசிய கலைக்கூடத்தில் உள்ள ஓவியங்கள் மற்றும் சிற்பங்களை இருப்பு சரிபார்ப்பு அமைப்பு ஆய்வு செய்ததாகவும், அதன் பின்னரே காணாமல் போன கலைப்படைப்புகள் குறித்த தகவல்கள் கண்டறியப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, கையிருப்புப் பதிவேட்டில் மொத்தம் 281 ஓவியங்கள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது தேசிய கலைக்கூடத்தில் 239 ஓவியங்கள் மட்டுமே உள்ளன என்று அமைச்சர் கூறியள்ளார்.
முத்துவேலுக்கு புற்றுநோய் என தெரிந்ததும் பாண்டியன் செய்த காரியம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
365 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறை - பிரித்தானிய அமைப்பில் இடம்பிடித்த தமிழ்நாட்டு பெண் News Lankasri