தமிழரசுக் கட்சியின் மூத்த பேச்சாளர் ஆலால சுந்தரத்தின் 41ஆவது நினைவு தினம் அனுஷ்டிப்பு
இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த பேச்சாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான அமரர் அடலேறு ஆலாலசுந்தரத்தின் 41ஆவது நினைவு தினம் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நல்லூர் தொகுதிக் கிளையினரால் நல்லூர் சங்கியன் மன்றத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் நேற்றுப் புதன்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்வில், யாழ். மாநகர சபை மேயர் திருமதி மதிவதனி விவேகானந்தராசா, பிரதி முதல்வர் இ.தயாளன், சபை உறுப்பினர்கள், கட்சியின் ஏனைய உறுப்பினர்கள் மற்றும் அன்னாரது உறவினர்கள் கலந்துகொண்டனர்.
அமரரின் திருவுருவப் படத்துக்கு விளக்கேற்றி, மலர் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து, தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம் நினைவுரையாற்றினார்.
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 18
காணாமல் ஆக்கப்பட்டோருக்கான தினமும் அநுர அரசாங்கத்தின் நிலைப்பாடும்..! 21 மணி நேரம் முன்
19 நாட்களை கடந்து திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் விஸ்வநாத் & சன்ஸ்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் விவரம் Cineulagam