ரெலோ தலைவர் தோழர் சிறீசபாரத்தினத்தின் 40ஆம் ஆண்டு நினைவேந்தல்
தமிழீழ விடுதலை இயக்கத்தின் (TELO) முன்னாள் தலைவரும், போராட்ட முன்னோடியுமான சிறீசபாரத்தினத்தின் 40ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு நேற்று மாலை யாழ்ப்பாணம் கோண்டாவிலில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
கடந்த 1986ஆம் ஆண்டு தோழர் சிறீசபாரத்தினம் அவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட இடமான கோண்டாவில் கிழக்கு, அன்னங்கை தோட்ட வெளி பகுதியில் இந்த நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டது.
நேற்று மாலை 4 மணியளவில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு, நினைவேந்தல் குழுவின் தலைவர் எஸ். செந்தூரன் தலைமை தாங்கினார்.
நிகழ்வின் போது அன்னாரின் திருவுருவப் படத்திற்கு சுடர் ஏற்றி, மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதில் முக்கிய விருந்தினர்களாகவும் பங்கேற்பாளர்களாகவும் பலர் கலந்துகொண்டனர்.
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் (EPDP) தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம். ரெலோ (TELO) இயக்கத்தின் முன்னாள் போராளிகள், அன்னாரின் ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் என விடுதலைப் போராட்ட வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தலைவரின் தியாகத்தை நினைவுகூரும் வகையில் அமைந்த இந்நிகழ்வில், பலரும் கலந்துகொண்டு தமது அஞ்சலிகளைச் செலுத்தினர்.



சன் டிவி சீரியலில் நாயகனாக நடிக்கும் விஜய் டிவி சீரியல் நடிகர்... யார், என்ன தொடர், முழு விவரம் Cineulagam