மூதூர் மணற்சேனை படுகொலையின் 40ஆம் ஆண்டு நினைவேந்தல்: கண்ணீர் மல்க அஞ்சலி!
கடந்த 1986ஆம் ஆண்டு ஜூலை மாதம் 16ஆம் திகதி மூதூர், மணற்சேனை கிராமத்தில் இடம்பெற்ற கொடூரத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட 44 அப்பாவி பொதுமக்களின் 40ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (16) வியாழக்கிழமை உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
மணற்சேனை இந்து மயான முன்றலில் நடைபெற்ற இந்நினைவேந்தல் நிகழ்வை, உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்கள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.
40ஆம் ஆண்டு நினைவேந்தல்
நிகழ்வின் ஆரம்பத்தில், உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்திக்காக ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, உயிரிழந்த தங்களின் உறவுகளை நினைவுகூர்ந்து ஈகைச்சுடர்கள் ஏற்றப்பட்டு, மலர்தூவி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதில் பெருமளவிலான பொதுமக்களும் கலந்துகொண்டு அஞ்சலிகளைச் செலுத்தினர்.
கடந்த 1986 ஜூலை 16 அன்று மணற்சேனை கிராமத்திற்குள் புகுந்து நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலில், ஒரே நாளில் 44 பொதுமக்கள் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.




ராகு-கேதுவுக்கு இடையில் 7 கிரகங்கள் : அரிதான கிரகச் சேர்க்கையால் சிக்கலில் சிக்கப்போகும் 3 ராசிகள்! Manithan