திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கான 40ஆவது ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிப்பு
திருகோணமலை - வெருகல் படுகொலையின் 40வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, வெருகல் - பூநகர் தான்றோண்றிஸ்வரர் ஆலய வளாகத்தில் இன்று(12.06.2026) உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரால் கூட்டுவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில், உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்தி வேண்டி சிறப்புப் பூஜை வழிபாடுகளும், ஒரு நிமிட மௌனப் பிரார்த்தனையும் நடைபெற்றுள்ளன.
தமிழ் மக்கள் கொல்லப்பட்டதைக் கூற பேராயர் கர்தினாலுக்குத் தயக்கம் ஏன்! நாடாளுமன்றத்தில் சிறீதரன் கேள்வி
நினைவேந்தல் அனுஷ்டிப்பு
இதனைத் தொடர்ந்து, உயிரிழந்தவர்களின் திருவுருவப் படங்களுக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

கடந்த 1986ஆம் ஆண்டு ஜூன் மாதம் 12ஆம் திகதி, வெருகல் - ஈச்சிலம்பற்று அகதி முகாமில் தஞ்சமடைந்திருந்த மக்களுக்காக அத்தியவசிய உணவுப் பொருட்களை ஏற்றிவரும் வழியில், அரச அதிகாரிகள் மூவர் உட்பட 21 பொதுமக்கள் சேருவில - மஹிந்தபுர பகுதியில் வைத்து ஆயுததாரிகளால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கொடூரச் சம்பவம் இடம்பெற்று இன்றுடன், 40 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், இந்த நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




இன்று இரவு., கார்க் தீவு, எண்ணெய் வளங்களை கைப்பற்றுவோம்- ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை News Lankasri
பிரித்தானியாவை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ள இலங்கையர்: கர்ப்பிணி மனைவியின் அச்சம் News Lankasri