யாழ்.விமான நிலையத்திற்கான கட்டுவன் - மயிலிட்டி வீதி விடுவிப்பு (Photos)

Airport Jaffna Gotabaya Rajapaksa Angajan Ramanathan
By Independent Writer Jan 19, 2022 10:50 PM GMT
Report

யாழ். விமான நிலையத்துக்கு செல்லும் கட்டுவன் - மயிலிட்டி வீதியில் விடுவிக்கப்படாமலிருந்த 400 மீற்றர் வீதியின் சர்ச்சை தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

இவ்வீதியை விடுவிப்பது தொடர்பாக கடந்த நல்லாட்சி காலத்தில் பலரால் முயற்சியெடுக்கப்பட்டும் அது கைகூடாத நிலையில், ஆட்சி மாற்றத்தின் பின்னராக, யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான அங்கஜன் இராமநாதனும், முன்னாள் யாழ்.மாவட்ட அரச அதிபர் என். வேதநாயகமும் இவ்விடயம் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சுக்கு கடிதம் அனுப்பியிருந்தனர்.

மேலும், கடந்த 2021 ஆண்டு டிசம்பர் 7 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டத்தில், அங்கஜன் இராமநாதன் (Angajan Ramanathan) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் (Gotabaya Rajapaksa) இவ்வீதி விடுவிக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைத்திருந்தார்.

அதன்போது ஜனாதிபதி இவ்விடயத்தை ஆராயுமாறு இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவிடம் கோரியிருந்தார்.

இதன் பலனாக இவ்வீதியின் கிழக்கு பகுதியில் இருந்த இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்தின் முட்கம்பி வேலி பின்நோக்கி நகர்த்தப்படவுள்ளதுடன், வேலிக்குள் உள்ள வீதி விடுவிக்கப்படுவதுடன் அங்கு தற்போது இராணுவத்தினரின் பொறியியல் பிரிவினரால் புனரமைப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

தேசிய பாதுகாப்பு நிலமைகளையும் ஆராய்ந்ததன் அடிப்படையில், குறித்த பகுதியில் 6 மீற்றர் தூரத்திற்கு பாதுகாப்பு வேலியை நகர்த்துவதன் ஊடாக, விடுவிக்கப்படும் 400 மீற்றர் நீளமான நிலப்பகுதி வீதி அபிவிருத்தி அதிகார சபையிடம் கையளிக்கப்படவுள்ளது.

இதேவேளை 1990 ஆம் ஆண்டு இடம்பெயர்வுக்கு முன்னர் இருந்த வீதியை போல தற்போது முழுமையாக விடுவிப்பதுக்கு 25 மீற்றர் பின்நகர்த்தவேண்டும் என ஒருசிலர் கூறுகின்றனர். ஆனால் தேசிய பாதுகாப்பை கருத்தில் கொண்டால் தற்போதைய நிலையில் இதற்கு சாத்தியமில்லாத தன்மையே அங்கு காணப்படுகின்றது.

அதாவது, கட்டுவன் - மயிலிட்டி வீதியின் 400 மீற்றர் சர்ச்சைக்குள்ள பகுதியின் கிழக்கு புறமாக இராணுவ உயர் பாதுகாப்பு வலய முட்கம்பி வேலி உள்ளது. அதற்கு பின்புறமாக விமானப்படையின் முட்கம்பி வேலி உள்ளது. அதற்கு பின்னால் விமான நிலையத்தின் சுற்று மண் அணை உள்ளது.

இவ்வாறான நிலையில் 25 மீற்றர் தூரத்துக்கு வேலியை பின்நகர்த்துவதாயின் விமான நிலைய மண் அணை உள்ள பகுதியிலேயே வேலி நகர்த்த வேண்டும்.

தேசிய பாதுகாப்பு தொடர்பான கரிசனையின் அடிப்படையில் இவ்விடயம் சாத்தியப்படாத நிலையில், தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் 6 மீற்றர் வரை பாதுகாப்பு வேலையை பின்நகர்த்த முடிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த 400 மீற்றர் வீதியானது புனரமைக்கப்பட்டு, விமான நிலையத்துக்கு தற்போது செல்வதற்காக பாவிக்கப்படும் காப்பெற் வீதியுடன் இணைக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை யாழ்ப்பாணம் விமான நிலையத்தை சென்றடைவதற்கான பயணத்தை இலகுபடுத்தும் விதமாகவும், மக்களின் நீண்டகால கோரிக்கையாகவும் அமைந்திருந்த கட்டுவன் - மயிலிட்டி வீதியின் 400 மீற்றர் பகுதியை விடுவிக்க நடவடிக்கை எடுத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சக்கும், இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கும் இவ்விடயத்தில் பணியாற்றிய அரசு அதிகாரிகள் அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.  

GalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
நன்றி நவிலல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
நன்றி நவிலல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

01 Apr, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநாவலூர், Coventry, United Kingdom

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கொடிகாமம், Basel, Switzerland

03 May, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கொழும்பு, முல்லைத்தீவு, Den Helder, Netherlands

10 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், Wuppertal, Germany

02 May, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US