40000 அடி உயரத்தில் உயிருக்கு போராடிய நபர்! 5 மணி நேரம் போராடிய வைத்தியர்
லண்டனில் இருந்து இந்தியா, பெங்களூரு நோக்கி வந்த விமானத்தில் மாரடைப்பு ஏற்பட்ட பயணியை காப்பாற்ற 2 முறை இங்கிலாந்து வாழ் இந்திய வைத்தியர் போராடியுள்ளார்.
இதன்போது குறித்த விமானத்தில் விஷ்வராஜ் விமலா (வயது 48) என்ற இங்கிலாந்து வாழ் இந்திய வைத்தியர் தனது தாயாருடன் பயணித்த நிலையில் அவருடன் வந்த 43 வயதுடைய சக பணியாளருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், பாதிக்கப்பட்டவரை உடனடியாக காப்பாற்றும் பணியில் வைத்தியர் ஈடுபட்டதுடன்,40000 அடி உயரத்தில் உயிருக்கு போராடிய நபரை 5 மணி நேரத்தின் பின்னர் போராட்டத்திற்கு மத்தியில் காப்பாற்றியுள்ளார்.
விமானத்தில் இருந்த முதலுதவி சிகிச்சைக்கான உபகரணங்களின் உதவியுடன், இதய துடிப்பு கண்காணிப்பு உபகரணம், இரத்த அழுத்தம் கண்டறியும் கருவி மற்றும் சக பயணிகள் தந்த பொருட்களை கொண்டு அந்த நபரை காப்பாற்றியுள்ளார்.
5 மணிநேரம் போராடிய வைத்தியர்
இது குறித்து வைத்தியர் விஷ்வராஜ் கூறும்போது, எனது மருத்துவ பயிற்சியின்போது இதுபோன்ற சூழல்களை சந்தித்து உள்ளேன். ஆனால், 40 ஆயிரம் அடி உயரத்தில் விமானத்தில் இதுபோன்ற ஓர் அனுபவம் ஏற்பட்டது இல்லை. ஏறக்குறைய ஒரு மணிநேரம் போராடி அவருக்கு மீண்டும் சுவாசம் கொண்டு வரவைத்தேன்.
அதிர்ஷ்டவசத்தில், அவசரகால உபகரணங்கள் விமானத்தில் இருந்தன. சக பயணிகள் ஒவ்வொருவரிடமும் பேசி, குளுக்கோஸ் மீட்டர் உள்ளிட்ட பல உபகரணங்களை பெற்றேன்.
எனினும், 2-வது முறையாக அந்த நோயாளிக்கு மற்றொரு முறை மாரடைப்பு ஏற்பட்டது. இந்த முறை நீண்டநேரம் அவரை காப்பாற்ற போராடி வேண்டியிருந்தது. மொத்தம் 5 மணிநேரம் அவரை உயிருடன் வைத்திருக்க நாங்கள் முயற்சித்து கொண்டிருந்தோம்.
இதனை தொடர்ந்து, விமானம் வரும் வழியில் மும்பை விமான நிலையத்தில் அவசர தரையிறக்கம் செய்யப்பட்டது. பயணியை அவசரகால குழுவினர் மீட்டு, சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
7 வருட மருத்துவ பணியில் எனது தாயார் முதன்முறையாக அதிரடியாக நான் செயல்பட்ட விசயங்களை பார்த்து ஆச்சரியம் கொண்டார். அது என்னை இன்னும் உணர்ச்சிவசத்தில் ஆழ்த்தியது. இதன்பின்பு, அந்த நோயாளி மருத்துவரை பார்த்து கண்ணீருடன் நன்றி தெரிவித்து கொண்டார். இதற்காக நன்றி கடன்பட்டுள்ளேன் என அவர் கூறியுள்ளார். இது தனது வாழ்நாளில் மறக்க முடியாதது என வைத்தியர் கூறியுள்ளார்.