துறைமுகத்தில் சிக்கியுள்ள 400 வாகனங்கள் : வெளியான தகவல்
ஜப்பானில் (Japan) இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 400 வாகனங்கள் விடுவிக்க முடியாத சூழலில் இருப்பதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
வாகன இறக்குமதி தொடர்பான வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டுள்ள விதிமுறைகளே இந்த நிலைமைக்கு வழிவகுத்துள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக்க சம்பத் மெரெஞ்சிகே தெரிவித்துள்ளார்.
தர ஆய்வு அறிக்கைகள்
இந்நிலையில், இறக்குமதி செய்யப்படும் அனைத்து வாகனங்களுக்கும் தர ஆய்வு அறிக்கைகள் ஒரு நிறுவனத்தால் வழங்கப்பட்டுள்ளன.
வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் படி, தர பரிசோதனை அறிக்கைகளைப் பெறக்கூடிய பரிந்துரைக்கப்பட்ட நிறுவனங்களில் அந்த நிறுவனம் இல்லை என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வொன்றை வழங்குவது இன்றியமையாதது எனவும் வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக்க சம்பத் மெரெஞ்சிகே தெரிவித்துளளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
