தனியார் மயப்படுத்தப்படும் 40 அரச நிறுவனங்கள்: சர்வதேச நாணய நிதியம் நிபந்தனை
இலங்கையின் சுமார் 40 அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்த வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியம் நிபந்தனை விதித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் லச்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
சர்வக்கட்சி அரசாங்கம் தொடர்பில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் சந்திப்பை நடத்திய பின்னர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
சர்வதேச நாணய நிதியம் நிபந்தனை
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,“சர்வதேச நாணய நிதியத்துடன் நிதியுதவி குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
இதன்போதே சர்வதேச நாணய நிதியம், இலங்கையின் 40 அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்த வேண்டும் என்று கேட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற விடயங்களுக்கு அரசாங்கத்தில் அங்கம் வகிக்காமலேயே எதிர்கட்சி என்ற
வகையில், நாடாளுமன்றில் அரசாங்கத்துக்கு ஆதரவை வழங்க முடியும்” என கூறியள்ளார்.