இலங்கைக்குள் MI-17 உலங்கு வானூர்திகளில் அதிரடியாக நுழைந்த 40 விசேட இந்திய விமானப்படை வீரர்கள்
இலங்கையுடனான இருதரப்பு உறவை வலுப்படுத்தும் நகர்வில் இந்தியா தற்போது அதிதீவிரமாக செயற்பட்டு வருகிறது.
அதன் ஒரு அங்கமாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை வருகை அமையப்பெற்றுள்ளதுடன் சர்வதேசத்தின் கவனத்தையம் பெற்றுள்ளது.
இந்நிலையில் அவரின் வருகையை முன்னிட்டு அதிதீவிர பாதுகாப்புக்கள் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டுள்ளமை காணக்கூடியதாய் உள்ளது.
இதில் குறிப்பாக அவருடைய பாதுகாப்புகாக இந்தியாவில் இருந்து சிறப்பு வாகனங்களுடன் இந்திய உளவுப்பிரிவின் விசேட அதிகாரிகளும் இலங்கையில் நிலைகொண்டுள்ளனர்.
அத்தோடு இந்திய விமானப்படை, மற்றும் அந்நாட்டு இராணுவத்தின் விசேட படைப்பிரிவகளும் இலங்கையை வந்தடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதில் முக்கியமாக இந்தியாவின் MI-17 உலங்கு வானூர்திகள் பயன்படுத்தப்படுவதற்காக தெரிவிக்கப்படுகிறது.
மோடியின் வருகையின் போது, நாட்டின் பாதுகாப்புத் தலைவர்கள் மற்றும் உளவுத்துறைத் தலைவர்களுடன் ஒருங்கிணைந்து இந்தியப் பாதுகாப்பு அதிகாரிகள் குழு பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் மோடியின் இலங்கை வருகையில் இவ்வாறான பாதுகாப்பு அம்சங்களின் நோக்குநிலைகள் எதை மையப்படுத்தியுள்ளது என்பதையும், இலங்கையில் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் இல்லாத போதும் இவ்வாறான பாதுகாப்பு வழங்கப்படுவதன் பின்னணி தொடர்பிலும் விரிவாக ஆராய்கிறது ஐபிசி தமிழின் செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி....
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |