பொதுமக்களிடமிருந்து பணம் மற்றும் தங்க நகைகள் திருட்டு: இளம் யுவதிகள் கைது
ஹட்டன் நகரில் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடிய யுவதிகள் நால்வரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இதனையடுத்து குறித்த யுவதிகளிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் அவர்கள் பொதுமக்களிடமிருந்து பணம் மற்றும் தங்க நகைகள் போன்வற்றை திருடியுள்ளமை தெரியவந்துள்ளது.
ஹட்டன் நகரை சூழவுள்ள பகுதிகளில் இருந்து ஹட்டன் நகருக்கு பொருட்களை வாங்கச்செல்பவர்களிடமிருந்து இந்த யுவதிகள் பணம் மற்றும் பொருட்கள் பலவற்றை திருடியுள்ளனர்.
நீதிமன்றில் முன்னிலைபடுத்த நடவடிக்கை
இதனையடுத்து சிவில் உடையில் கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பெண்ணொருவரை கைது செய்து விசாரித்த நிலையில், நான்கு யுவதிகளும் இத்திருட்டு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இதன்போது கைதான நான்கு யுவதிகளிடமிருந்து 2 இலட்சத்து 55ஆயிரம் ரூபாய் பணமும் தங்க நகைகளும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 21 - 26 வயதுக்குட்பட்டவர்கள் எனவும், இவர்கள் வென்னப்புவ மற்றும் கொழும்பு பிரதேசத்தில் வசிப்பவர்கள் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சந்தேகநபர்களை ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |