நிமோனியா காய்ச்சலால் பீடிக்கப்பட்ட 4 வயது சிறுவன் உயிரிழப்பு!
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு உடையார் கட்டு பிரதேசத்தில் வசித்துவரும் சிறுவன் நிமோனியா காய்ச்சலால் பீடிக்கப்பட்ட நிலையில் இன்று (13.04.2023) உயிரிழந்துள்ளார்.
புதுக்குடியிருப்பு - உடையார் கட்டு பகுதியினை சேர்ந்த நிர்மலன் கபீஸ் என்ற 04 வயதுடைய சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சிறுவன் சளி காய்ச்சலால் பீடிக்கப்பட்ட நிலையில் நேற்றைய தினம் (12.04.2023) புதுக்குடியிருப்பு ஆதார மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் மேலதிக சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பிரேத பரிசோதனை
உயிரிழந்த சிறுவனின் பிரேத பரிசோதனைகள் முல்லைத்தீவு மாவட்ட சட்டவைத்திய அதிகாரியால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது சிறுவன் நிமோனியா காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளதாகவும் சிறுவனின் சடலம் பெற்றோரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திடீரென ஜனனியை தள்ளி அடிக்க சென்ற கதிர்... பரபரப்பான எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
அண்ணாமலைக்கு தெரியவந்த வீட்டை அடமானம் வைத்த விஷயம், மனோஜிற்கு கொடுத்த தண்டனை... சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam