யாழில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட 4 வாகனங்கள் பறிமுதல்
யாழ். சாவகச்சேரிப்(Chavakachcheri) பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட 4 வாகனங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டள்ளன.
உரிய அனுமதிப் பத்திரங்கள் இன்றி மணல் ஏற்றிச் சென்ற குறித்த வாகனங்களின் சாரதிகளும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்டவிரோத மணல் அகழ்வு
சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மறவன்புலோ-கோவிலாக்கண்டிப் பகுதியில் இன்று அதிகாலை சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்டுக்கொண்டிருந்த உழவியந்திரம் ஒன்றையும் - அதன் சாரதியையும் சாவகச்சேரிப் பொலிஸார் கைது செய்திருந்தனர்.
இதன்படி அத்துடன் கடந்த செவ்வாய்க்கிழமை உரிய அனுமதிப் பத்திரம் இன்றியும் - அனுமதிப் பத்திரத்தில் மோசடி மேற்கொண்டும் மணல் கடத்தலில் ஈடுபட்ட மூன்று டிப்பர் வாகனங்கள் மற்றும் அதன் சாரதிகளையும் சாவகச்சேரிப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |