கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய 4 இலங்கையர்கள் டெல்லியில் கைது
இந்தியாவின் டெல்லி மற்றும் வேறு மாநிலங்களில் தற்காலிமாக தங்கியிருந்து பல்வேறு கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட நான்கு இலங்கையர்களை கைது செய்துள்ளதாக இந்தியாவின் டெல்லி மாநில பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த புதன் கிழமை கைது செய்யப்பட்ட இவர்களிடம் இருந்து 46 லட்சத்து 50 ஆயிரம் ரூபா பணத்தை இந்திய பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
“தக் தக் என்ற பெயரில் இயங்கும் குழு
சி.சி.டி.வி கெமராக்களை ஆய்வு செய்து, தெற்கு டெல்லியில் மாதங்கீர் குடியிருப்பு பகுதியில் “தக் தக் என்ற பெயரில் இயங்கும் குழுவை கைது செய்ததாக லூதியான பொலிஸ் ஆணையாளர் மந்தீப் சிங் சித்து தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நேற்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவிருந்தனர். சந்தேக நபர்கள் பெருந்தொகை பணத்தை கொள்ளையிட்டிருப்பார் என எதிர்பர்க்கவில்லை எனவும் இவர்கள் பாதுகாப்பு தரப்பிடம் இருந்து தப்பிப்பதற்காக அலைபேசிகள் மற்றும் வேறு தொழிற்நுட்ப கருவிகள் பயன்படுத்துவதை தவிர்த்து வந்துள்ளனர் எனவும் மந்தீப் சிங் சித்து கூறியுள்ளார்.
தமிழகத்தின் மதுரையை சேர்ந்த முருகன் என அடையாளம் காணப்பட்டுள்ள ஒரு சந்தேக நபரிடம் இருந்து 40 லட்சம் ரூபா கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் உத்தர பிரதேசத்தில் உள்ள மாதங்கீர் குடியிருப்பில் வசித்து வரும் பிரகாஷ், சுரேஷ் மற்றும் டெல்லியில் ஜலந்தார் லோஹியான் பகுதியில் வசிக்கும் சுரேஷ் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
டெல்லியில் கைது செய்யப்பட்ட சுரேஷ் என்பவரிடம் இருந்து 6 லட்சத்து 50 ஆயிரம் கைப்பற்றப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் சண்டீகாரில் வாகனம் ஒன்றில் இருந்த 57 லட்சத்து 40 ஆயிரம் ரூபா பணம் கொள்ளையிடப்பட்ட சம்பவத்துடன் இவர்களுக்கு தொடர்பு இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன எனவும் டெல்லி பொலிஸார் கூறியுள்ளனர்.