பாதாள உலகத்தில் ஈடுபட்டுள்ள முக்கிய புள்ளிகள்: பெரும் சிக்கலில் பொலிஸார்
மக்கள் பிரதிநிதிகள் நான்கு பேர் பாதாள உலகத்தில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், பாதாள உலகத்தில் தொடர்புடைய பிரபல பெயரை கொண்ட ஒருவரின் சகோதரியும் பிரதிநிதியாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்களுக்கு எதிராக ஏற்கனவே சிறப்புத் தேடுதல் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சிக்கலான சூழ்நிலை
மேலும் அவர்கள் இருக்கும் இடங்கள், அவர்கள் தொடர்புக்கொள்ளும் நபர்கள் மற்றும் அவர்களின் செயற்பாடுகள் குறித்து உன்னிப்பாக கண்காணித்த பின்னர் விரைவில் சட்ட நடவடிக்கை எடுக்க தயாராக இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, மக்கள் பிரதிநிதிகள் பாதாள குற்றவாளிகளுடன் தொடர்பு கொண்டுள்ளமை மற்றும் அவர்களின் பல்வேறு பரிவர்த்தனைகளும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் வெளிப்படுத்தியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறான குற்றங்களில் ஈடுபட்டமைக்காக நீதிமன்ற வழக்குகளை எதிர்கொள்ளும் மக்கள் பிரதிநிதிகளின் பாதுகாப்பிற்காக பொது வரிப்பணத்தைச் செலவிடுவது ஒரு சிக்கலான சூழ்நிலையாக மாறியுள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |