பொலிஸ் பிணை வழங்கப்பட்ட சந்தேக நபர் மரணம்! நான்கு பொலிஸார் இடைநிறுத்தம்
பொலிஸ் பிணை வழங்கப்பட்ட சந்தேக நபர் ஒருவரின் மரணம் தொடர்பில் வாதுவை பொலிஸ் நிலையத்தின் நான்கு உத்தியோகத்தர்கள் தற்காலிக பணியிடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் (11) வாதுவை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபரொருவர், பொலிஸ் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்திருந்தார்.
பொலிஸார் மீது குற்றச்சாட்டு
பொலிசாரினால் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அவர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் காரணமாகவே அவர் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டியிருந்தனர்.
நேற்று முன்தினம் இரவு அது தொடர்பில் வாதுவை பொலிஸ் நிலையத்தின் முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றும் இடம்பெற்றிருந்தது.
இந்நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு பொலிசார் நேற்று (12) மாலை கைது செய்து செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களை இன்றைய தினம் பாணந்துறை மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தர்ஷன் திருமணத்தை முடித்த ஜனனி-சக்தி எடுத்த அடுத்த அதிரடி முடிவு... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் Cineulagam

இதய நோய் ஆபத்தை தடுக்கணுமா? அப்போ இந்த 3 உணவுகளை சாப்பிடாதீங்க... எச்சரிக்கும் இதய நிபுணர்! Manithan
