பயங்கரவாத தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட 4 பேர் பிணையில் விடுதலை (Photos)
மாவீரர் தின நிகழ்வின் போது பயங்கரவாத தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்ட மட்டக்களப்பை சேர்ந்த 4 பேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
குறித்த நால்வரும் இன்று(19.12.2023) வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
சட்டமா அதிபர் திணைக்களம்
கைது செய்யப்பட்டவர்களின் விபரம் நேற்றைய தினம் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்றதையடுத்து உடனடியாக சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு கைது செய்யப்பட்டவர்களின் கோப்புக்கள் அனுப்பப்பட்டு பரிசீலிக்கப்பட்டதை அடுத்து பிணை வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பிணை வழங்கியவர்களில் வவுணதீவில் வைத்து கைது செய்யப்பட்ட உயர்தர பரீட்சைக்கு தோற்ற உள்ள ஒரு மாணவர் உட்பட நான்கு பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
மொத்தமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் 26, 27ஆம் திகதிகளில் மொத்தமாக 11 பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் இன்றைய தினம் 4 பேருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |








அமெரிக்காவில் திருட்டு சம்பவத்தில் கையும் களவுமாக சிக்கிய இந்திய பெண்: வெளியான வீடியோ காட்சி! News Lankasri

ஜனனி கேட்ட கேள்வி, குணசேகரனுக்கு தெரியவந்த ஜீவானந்தம் நிலைமை... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

புலம்பெயர்ந்தோர் விவகாரம்... சில நாடுகளின் விசா அனுமதியை ரத்து செய்யவிருக்கும் பிரித்தானியா News Lankasri

அமெரிக்காவில் தோசையால் புகழ்பெற்ற இலங்கை தமிழர்! கனடா, ஜப்பானிலும் ரசிகர்கள்..யார் அவர்? News Lankasri
